66கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளை செய்தமை தொடர்பில் குறித்த தனியார் கல்வி நிலையத்தின் சக ஆசிரியர் நேற்று (21-10-2016) மாணவியின் வீட்டிற்குச்சென்று அச்சுறுத்தியதுடன் தகாதவார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் கடந்த 18ம் திகதி பாடசாலை சீருடையுடன் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளமை தொடர்பில் கிளிநொச்சிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கிளிநொச்சி மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகியும் அவருடன் சென்ற சிலரும் நேற்று (21-10-2016) பகல் 9.00 மணியளவில் கடத்தப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்ததுடன் தகாத வார்த்தைப்பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டிற்கு நேற்று (21-10-2016) மதியம் சென்ற சிலரும் தனியார் கல்வி நிலையம் தொடர்பில் எங்களது முறைப்பாடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நிலையங்களில் பல்வேறு வகையான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment