யாழ்ப்பாணம் கொக்குவில் குளிப்பிடி சந்தியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த மாணவனின் தாய் குறித்த மாணவனை பற்றி கூறி கதறி அழுகின்ற காட்சி எங்கள் கமெராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

‘மேசன் தொழில் செய்து படித்து பல்கலைகழகம் சென்றான் என் மகன். எங்கள் குடும்பத்தின் தந்தையாய் இருந்தவரை சிதைத்து கொன்று விட்டார்களே.

கால் இயலாத என் மகனை இவ்வாறு கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லையே.

இவன் தானாய் மோதி சாகவில்லையே. இனி இவ்வாறு எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது  என்று கதறி அழும் தாயின் ஓலம் பார்ப்பவரின் கண்களில் தானாய் கண்ணீர் வர வைக்கின்றது.

Comments

comments, Login your facebook to comment