unnamed-9கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பிரிவிற்கு உட்பட்ட தர்மபுரம் பொலிஸ் பகுதியில் கட்டைக்காடு எனும் இடத்தில் கசிப்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று, தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி M.M.B.N சதுரங்க தலைமையிலான பொலிஸ் அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொட‌ர்பில் மேலும் தெரிய வருவது,

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் 0113081040 எனும் பொலிஸ் தொடர்பு தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸ் அதிகாரி தலைமை‌யிலான பொலிஸ் அணியினரின் சுற்றிவளைப்பின் போதே, 45 போத்தல் கசிப்பு , 365 போத்தல் கசிப்பு கோடா என்பவற்றை கைப்பற்றியுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த கசிப்பு உற்பத்தி தொழிற்சாலையும் இதன்போது நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சில நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற நபர்கள் தொடர்பிலும் கசிப்பு உற்பத்தி தொடர்பிலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், தடயப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.unnamed-9

 

Comments

comments, Login your facebook to comment