கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள போக்குவரத்து பொலிஸார் பயன்படுத்தும் கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொட்டகையில் நின்று பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை வழமையான ஒன்றாகும். ஆயினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இனம் தெரியாத நபர்கள் நெருப்பு பந்தம் ஒன்றை கொட்டகையினுள் எறிந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.polices01 polices-12

Comments

comments, Login your facebook to comment