garuththal_001யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் சட்ட முரணான மன்னிக்கப்பட முடியாத குற்றமென வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் எத்தனை ஆர்ப்பாட்டம், கடையடைப்பு`2, எதிர்ப்புகள் மற்றும் ஜனநாயக போராட்டங்களை நடத்தினாலும் இறந்த மாணவர்களின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. ஒரு பிள்ளையை பெற்று, வளர்த்து ஆளாக்கி இந்த வயதில் பறிகொடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், உண்மையான நண்பர்களுக்கும்தான் அதன் வேதனை, வலி தெரியும். ஆகவே இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

மேலும் எதிர்காலத்தில் எமது மாணவர்களும், பொதுமக்களும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சட்டமுரணான செயல்கள் நடைபெறாது இருக்க வேண்டுமாயின் இவ்வாறான ஜனநாயக ரீதியான போராட்டங்கள் தேவையாகவுள்ளது. ஆகவே நாளையதினம் நடைபெறவுள்ள மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு எல்லோரும் தத்தமது பங்களிப்பை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் அன்பாக வேண்டிநிற்கின்றார்.

குறிப்பாக கடந்த காலத்தில் தனியார் போக்குவரத்து துறையினர், வர்த்தக சங்கங்கள் மற்றும் கிராமமட்ட அமைப்பினர் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். ஆனால் தற்போது கடையடைப்புக்கு அழைப்புவிடுத்த கட்ச்சியினர் சம்பந்தப்பட்ட அமைப்பினரோடு தொடர்புகொள்ளவில்லையென முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. சிறு சிறு தவறுகளைப் பொருட்படுத்தாது நடைபெறவிருக்கும் ஹர்த்தாலை பலமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வலுப்பெறச்செய்ய அனைவரும் ஒன்றுசேர்ந்து முன்னெடுப்போம் என அழைப்பு விடுக்கின்றார் போக்குவரத்து அமைச்சர்.

Comments

comments, Login your facebook to comment