5bf98ade-804a-4d2d-98fe-dad5978a6dea-720x480கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு, அதற்கான கட்டடம் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தைக்கான கட்டத்தொகுதி என்பவற்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கடந்த செம்ரம்பர் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச்சந்தை கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 110 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியதுடன், பெருமளவான சொத்தழிவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில் தீயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாமையினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அவசரமாக தொடர்புகொண்டுயாழ் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினை வரவளைத்தும் இராணுவத்தினரின் உதவியுடனும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான விபத்துக்களின் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு பிரிவினை உருவாக்கி தருமாறும் இவ்வாறு தீயணைப்பு பிரிவு இன்மையால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிட்டதாகவும் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஸ்ட ஈட்டை பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமமந்திரி ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கை பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கரைச்சிப்பிரதேச செயலாளர் கம்சநாதன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு தனியான ஒரு தீயணைப்பு பிரிவு ஒன்றினையும் அதற்கான கட்டடம் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தைக்கான புதிய கட்டடத்தொகுதி என்பவற்றை அடுத்து ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்குவதாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்துள்ளதுடன் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையினை நகர சபையாகவும் கண்டாவளை உபசபையினை தனியான பிரதேச சபையாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் சார்பில் வர்த்தகர் இரத்தினமணி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment