unnamed-138கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், பல்லவராயன்கட்டு வீதியின் 532 மீற்றர் நீளமான பகுதி 2016ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் 6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

வன்னேரிக்குளம், பல்லவராயன்கட்டு பிரதான வீதியாகக் காணப்படும் குறித்த வீதியானது கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாதிருந்தது.

இந்த வீதியைப் பயன்படுத்தும் இப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இதனைப் புனரமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து வந்தனர்.

ஏ-32 பூநகரி மன்னார் பிரதான வீதியுடன் இணைக்கப்படும் மேற்படி வீதியின் 532 மீற்றர் நீளமான வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், மழை நீர் குறுக்கறுத்துப்பாயும் இரு இடங்களில் இரு மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Comments

comments, Login your facebook to comment