625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)ஆனையிறவு புகையிரதநிலையம் நாளை(28) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த புகையிரத நிலையம் அரச போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள வடக்கு புகையிரத வீதியை மக்களின் உதவியினால் கட்டி எழுப்பப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பாடசாலை மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பும் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு ரூபாய் நிதியும் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட பத்துரூபா நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அன்பின் தரிப்பிடம் என புகையிரத நிலையம் கட்டிஎழுப்பப்பட்டுள்ளது

இன்று அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு ஆனையிறவு புகையிரதநிலையம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் .இராதாகிருஸ்ணன் மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா ஆகியோரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (10)

Comments

comments, Login your facebook to comment