DSC06780கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருமாத காலம் மழை பிந்தியதன் காரணமாக நெற்செய்கையில் தாமதமேற்பட்டது. அதன் பின்னர் மழை வீழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் புழுதி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலே 64,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய காலபோக நெற்செய்கை நடைபெறுகின்றது.

Comments

comments, Login your facebook to comment