kilinochchi-3கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் 29.10.2016 அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மரக்குற்றிகள் வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அக்கராயன் பொலிஸ்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment