dickwella1கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டடம் அமைத்துத் தரப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதியளித்தார்.

கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை (28) விஜயம் செய்த அமைச்சர், கல்லூரியின் தேவைகள், வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

75 ஆசிரியர்கள், 1,200 மாணவர்கள் கொண்ட இந்தப் பாடசாலையில், போதிய வகுப்பறை இல்லாமையால், 20 வகுப்புக்கள் தற்காலிக கொட்டகைகள் இயங்குகின்றன. மேலும், ஒன்றுகூடல் மண்டபமும் இல்லை. இந்தவிடயம் கல்வி அமைச்சருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

இதனைக் கேட்ட அமைச்சர் 50 மில்லியன் ரூபாய் செலவில் 3 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

Comments

comments, Login your facebook to comment