North-Tree-Planting-11வட மாகாண சுற்றுச் சூழல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மரநடுகை மாதம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வட மாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன், வட மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து, நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது மருதம் எனும் மாதிரி தாவர பூங்காவின் பெயர்ப்பலகையினை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து மர நடுகை தொடர்பிலான நடனம் மற்றும் நாட்டிய நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மரக்கன்றினை நாட்டி மரநடுகை மாதத்தினை ஆரம்பித்து வைத்ததோடு, நிகழ்விற்கு வருகை தந்திருந்த மாணவர்களுக்கு நினைவாக மரக்கன்றுகளையும் வழங்கிவைத்தார்.North-Tree-Planting-10North-Tree-Planting-1 North-Tree-Planting-2 North-Tree-Planting-3 North-Tree-Planting-4 North-Tree-Planting-5 North-Tree-Planting-6 North-Tree-Planting-8 North-Tree-Planting-9 North-Tree-Planting-11 North-Tree-Planting-12

Comments

comments, Login your facebook to comment