932d415e-72f4-4ecd-b85b-50e80bb0840cகடந்த மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி ஏ9 வீதி வைத்திய சாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான வழக்கு இன்று(04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற நபர் கடந்த மாதம் 31 ம் திகதி அடையாள அணிவகுப்பு செய்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதன் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், நவநீதராசாவை நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த வழக்கு இன்றய தினம் அடையாள அணிவகுப்பு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்றும் மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், மீண்டும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment