625.0.560.320.160.600.053.800.668.160.90கிளிநொச்சி ஆனந்தநகர் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு (04-11-2016) வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

வெள்ளி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது ஜந்து பவுன் தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு, ஆலயத்தின் மூல விக்கிரகம் தூக்கி அருகில் வைக்கப்பட்டு அதன் கீழ் உள்ள ஜம்பொன் இயந்திர தகடும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமார் பத்தாயிரம் வரை பணம் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும் ஆலய நிர்வாகம் சந்தேகிக்கிறது.

இது தொடர்பில்  கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸார் சம்பவ இடதிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment