77160776கிளிநொச்சி பூநகரி தெளிகரைக்குளத்தின் புனரமைப்பு பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஈ.தயாரூபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தெளிகரைக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குளத்தின் அணைக்கட்டு தரமற்ற மண் கொண்டு புனரமைக்கப்படுவதாகவும் இதனை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய முறையில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதனுடைய புனரமைப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஈ.தயாரூபன் அவர்களிடம் தொடர்புகொண்டபோது பூநகரி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள குறித்த தெளிகரைக்குளமானது 3.8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதில் குறைபாடுகள் தொடர்பாக மக்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் அது உரிய முறையில் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment