Iranamadu_Tank_20151118_02p4கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் 2016ம் ஆண்டு 2017ம் ஆண்டுக்கான காலபோக சிறுபோக செய்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளமுடியுமென கிளிநொச்சி மாவட்டபிரதி நீர்ப்பாசனப்பொறியிலாளர் என்.சுதாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுகடன் திட்டத்தின் கீழ் சுமார் இராண்டாயிரம் மில்லியன்ரூபா செலவில் ஆறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இபாட் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 890 மில்லியன் ரூபா செலவிலும் இலங்கை அரசின் கடன்திட்டத்தின் கீழ் 310 மில்லியன் ரூபா செலவிலும் குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள் கழிவு வாய்க்கால்கள் வீதிகள் என்பவற்றின் புனரமைப்பு பணிகளும் இவ்வாண்டு சிறுபோக செய்கைகள் நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக 2016ம் ஆண்டுகாலபோகச் செய்கை மற்றும் 2017ம் ஆண்டு சிறுபோக செய்கைகளில் பாதிப்புக்கள் ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மட்டத்தில் காணப்படுகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் என்.சுதாகரன் அவரகள் இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. இதில் தடைகள் காணப்பட்டதால் தாமதங்கள் ஏற்பட்டன.

இருந்தும் பருவமழை தாதமாகியதால் அணைக்கட்டின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடிந்தது. 2016ம் ஆண்டுக்கான காலபோக செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காலபோக செய்கையிலோ அல்லது 2017ம் ஆண்;டு சிறுபோக செய்கையோ பாதிக்காது என்றும் இதில் விவசாயிகள் அச்சமடையத்தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment