unnamedகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி கிளிநொச்சிக்கு நேற்று (06-11-2016) விஜயம் செய்த எதிர் கட்சித் தலைவர் இராசம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

விமான நிலையத்தில் கைது செய்த கணவர் தொடர்பில் அவரது மனைவி எதிர்கட்சி தலைவரிடம்முறைப்பாடு செய்துள்ளார். இன்று கிளிநொச்சியில் எதிர்கட்சி தலைவரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். முன்னால் போராளியான நடராசா சபேஸ்வரன் எனும் 31வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இவர் கடந்த 23ம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக எதிர்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தெரிவிக்கையில், தனது கணவர் முன்னால் போராளி என்பதனை நீதிமன்றிற்கு தெரிவித்ததாகவும், இறுதி யுத்தத்தின்போது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் நீதிமன்றவழக்கு தொடரப்பட்டதாகவும், 2010ம் ஆண்டு நீதிமன்றினால் பிணையில்விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
திருமண நிகழ்வு ஒன்றிற்காக இந்தியா சென்றபோது இந்தியாவிலிருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதன் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது கணவர் குற்றங்களை ஒப்புக்கொண்டு குடும்பத்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமையால் தானும் குழந்தையும் மிவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.unnamed unnamed-1

Comments

comments, Login your facebook to comment