முல்லைத்தீவு சுண்டிக்குளம் பகுதியில் 100 கிலோ கிராம் கோரளா கஞ்சா பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் குறித்த கஞ்சா பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிகன்ன மகோஸின் வழி நடத்தலில் தர்மபுரம் பொலிஸ் அத்தியட்சகர் D.M சதுரங்க தலைமையிலான குழுவினரால் 72 கிலோ கிராம் கஞ்சாப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கடத்தலில் ஈடுபட்ட தப்பியோடிய இருவரிடமிருந்து சுமார் 30 கிலோ கிராம் கஞ்சா பொருட்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் கஞ்சா பொருட்களை கைவிட்ட நிலையில் மோட்டர் வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.

அதன் போது சந்தேக நபர்கள் தப்பிபோடியதனால் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இந்த சம்பவம் முல்லைத்தீவு நிதவான் நீதிமன்றத்தில் விசாரணைகள் மெற்கொள்ளப்படவுள்ளது.

கடல் வழி மூலமே இந்த கஞ்சா பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment