maxresdefaultகிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் கல் அகழ்விற்கு சட்டரீதியான அங்கீகாரங்களைப்பெற்று மக்களின் அனுமதியுடனேயே அது மேற்கொள்ளப்படும் என பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளிப்பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான கல் அகழ்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் நிலத்திலிருந்து ஐம்பது அடி ஆழத்தில் சீமெந்து உற்பத்திக்கான கல் இருப்பதாக தெரிவித்து பல தடவைகள் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவ்வாறு கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் கடல்நீர் உட்புகுந்து ஏற்கனவே உவர் நிலமாக காணப்படும் இதனை அண்டிய கிராமங்களில் வாழமுடியாத நிலை காணப்படும்.

அத்துடன் இதனை அண்டிய பகுதிகள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என இப்பகுதி மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்;து வருவதுடன் தமது எதிர்ப்புக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஸ்னேந்திரன் அவர்களிடம் தொடர்புகொண்டபோது குறித்த பகுதியில் தற்போது அகழ்வுப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு புவிச்சரிதவியல் சுரங்கப்பணியகத்தின் ஆராட்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றின் மூலம் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் குறித்த பகுதியில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதற்கு சட்டரீதியான அங்கிகாரங்களைப் பெற்று மக்களின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததுடன் தற்போது மேற்கொள்ளப்படும் ஆராட்சிப்பணிகள் பொதுமக்களின் காணிகளில் மேற்கொள்ளப்படவில்லை பொதுஇடங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த ஆய்வுப்பணிகள் மக்களுக்கு எந்த பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment