கிளிநொச்சி அரச அதிகாரிகளால் உதிரவேங்கை ஆலய காணி தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிலஅளவை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை வைரவர் ஆலய காணியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்டதனை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் காணி மீண்டும் ஆலயத்திற்கு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது குறித்த காணியில் அரை ஏக்கர் தனக்குச் சொந்தமானது என்று கூறிக்கொண்ட பெண்ணொருவரின் வாக்குக்கு அமைய இன்று 08-11-2016 நிலஅளவை அதிகாரிகளால் நில அளவை செய்ய சென்ற போது மீண்டும் விளையாட்டுக் கழகம் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது

குறித்த காணி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் சொந்தமான காணி பல ஆண்டுகளாக ஆலயமும், ஞானபைரவர் விளையாட்டுக் கழகமும் பயன்டுத்தி வந்த நிலையில் வெளிநாட்டில இருந்துதற்போது வந்து தங்களுடையது என்று உரிமை கோருவது நியாயமற்றது அதற்கு நாம் அனுமதியளிக்க முடியாது என்று பொது மக்கள் தெரிவித்த நிலையில் நில அளவையும் கைவிடப்பட்டது

குறித்த காணி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஏ9 வீதியோடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment