625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையின் 45 கடைத் தொகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.

குறித்த கடைத் தொகுதிகளை இன்று(08) மாலை 04.15 மணியளவில் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை மறுநாள் 17ஆம் திகதி வந்து பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக விரைவில் மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதாக கூறிச்சென்றிருந்தார்.

அதன் பிரகாரம் கரைச்சிப் பிரதேசசபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீ விபத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிக கடைகளை அமைப்பதற்கு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

குறித்த ஒன்பது மில்லியனைக் கொண்டு 45 தற்காலிக கடைகள் கரைச்சிப் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்டிருந்தது.அவ்வாறு அமைக்கப்பட்ட கடைகளே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வடமாகாண முதமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம், தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், கரைச்சிப் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

Comments

comments, Login your facebook to comment