உதயநகர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் திருமதி மகிமராசா தர்மவதி என்பவரின் குடும்பம் கடந்த கால யுத்தத்தில் கடும் பாதிப்புக்குள்ளாகி தனது ஒரு பக்க கண்ணை இழந்துள்ளார் அவரது கணவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர்களது குடும்பம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையை அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரால் வெட்டப்பட்டு முடிவுறா நிலைமையில் இருந்த கிணற்றை மேலும் ஆழப்படுத்தி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவியினை காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் – லண்டன் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

இவ் உதவி தமக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் இவ் உதவியை செய்த கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கும் காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் – லண்டன் அமைப்பிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.14937274_975181509295274_6558806205486313930_n 14937339_975181572628601_4705430695735339322_n 15027364_975181515961940_1048649928324809680_n

Comments

comments, Login your facebook to comment