14900422_139231059885110_6944405179190151739_nகிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் சிவநகர் கிராமத்தையும் சிவன்சோலை கிராமத்தையும் இணைக்கும் பாலத்தின் இன்றைய நிலையே இது.

இப்பாலமானது கடந்த 2 வருடங்களுக்கு மேலாக எதுவித கட்டுமான பணிகளும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இவ்வாய்கால் அடைமழை மற்றும் வரத்து நீர்களால் மாதக்கணக்கில் பெருக்கெடுத்து பாயும் காலத்தில் இதன் ஊடான போக்குவரத்து தடைப்படுகிறது.

சிவன்சோலை எனும் கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் அன்றாட தேவைகளான மருத்துவம், பாடசாலைக் கல்வி, கடைத்தேவைகள், பஸ்போக்குவரத்து மற்றும் பலவற்றிற்கு இப்பாலத்தின் ஊடாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.

மாற்று பாதையை பயன்படுத்துவதாயின் சுமார் 20Kmக்கும் அதிகம் பயனம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் கர்ப்பினிகள், முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடைமழை காலங்களில் வீதிகளும் செப்பனிடப்படாத நிலையில் (பஸ்சேவை கூட இல்லை) நீண்ட தூரம் பயனம் செய்வதில் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கான பரீட்சைகள் காலத்தில் அடைமழை பெய்வதால் அவர்களின் கற்றலும் பாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி சிவநகர் பகுதி விவசாயகளின் விவசாய நிலங்களை கூட பராமரிக்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மருந்து தெளித்தல், பசளை போடுதல் போன்றன தடைப்படுவதால் உரிய விளைச்சலை பெற முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

ஆகையால் அப்பகுதி மக்களின் அவலநிலையை கருத்தில்கொண்டு அவர்களின் பயன்பாட்டிற்கான பாலத்தை இயலுமான விரைவில் கட்டி வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும்14991946_139230843218465_1023383094480893053_n14900422_139231059885110_6944405179190151739_n 14915334_139230883218461_7583817543610529234_n 14955908_139230866551796_7707202443772076281_n 14962551_139231076551775_1241262817658190990_n 14980568_139230863218463_6849183767064391542_n

Comments

comments, Login your facebook to comment