625.500.560.350.160.300.053.800.900.160.90கிளிநொச்சி விஸ்வமடு பின்தங்கிய கிராமப்பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த இரண்டாம் திகதி பாடசாலைக்கு சப்பாத்து அணியாது செருப்பு அணிந்து வந்த மாணவர்களின் பாதணிகளை ஆசிரியர் ஒருவர் தீ வைத்துள்ளார்.

குறித்த பாடசாலையின் தரம் பதினொன்றில் கல்விகற்கும் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்களது காலணிகளே அவ்வாறு வகுப்பு ஆசிரியரினால் பாடசாலையின் பிரதான கட்டிடத்திற்குப் பின்னால் வைத்து தீ மூட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செயற்பாடு எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் நாம் அன்றாடம் கூலித்தொழில் செய்தும் கடற்தொழில் செய்துமே எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றோம் எமது மாணவர்கள் சப்பாத்து அணியாமல் வந்ததனை நாம் சரி என்று வாதிடவில்லை சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் எமது கிராமங்கள் எல்லாம் மழை பெய்திருந்தது.

நாங்கள் நகரத்தில் இல்லை எத்தனையோ ஆறுகளையும் வாய்கால்களையும் தாண்டித்தான் எமது பிள்ளைகள் பாடசாலைக்கு வருகின்றார்கள் இதனாலே அன்று எமது பிள்ளைகள் செருப்புடன் வந்தார்கள் அது பாடசாலையின் விதிமுறைகளுக்கு பிழையான ஒன்றுதான்.

குறித்த வகுப்பாசிரியர் தன்னிச்சையாக முடிவெடுத்து எமது பிள்ளைகள் அழுது கொண்டிருந்த போதும் தூரத்தில் நின்று பார்க்காதீர்கள் பக்கத்தில் நின்று பாருங்கள் என்று கேலியாக கூறியவாறு செருப்பு முழுவதனையும் எரித்துள்ளார் இந்த பிழைக்கு வேறு தண்டனைகள் வழங்கினால் கூட ஏற்று கொள்ளாலாம் வறுமைப்பட்ட எங்களுக்கு இவ்வாறு செய்துள்ளார் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறான சம்பவம் ஒன்று அவ்வாறு நடைபெறவில்லை என குறித்த ஆசிரியர் சம்பவத்தினை மறைக்க காலணிகள் பெறப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது அதனை மீண்டும் மாணவர்களுக்கு வழங்க உள்ளேன் என பல பொய்யான காரணங்களை சொல்லி இருக்கின்றார். இருப்பினும் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தினை கடந்த போதும் காலணிகள் மீளவும் கையளிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments

comments, Login your facebook to comment