625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினரால் பாதணிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசலையில் கடந்த மாதம்(15) பாடசாலைக்கு பாதணிகள் அணிந்து வராத மாணவா்களின் பாதணிகள் கழற்றப்பட்டு வீதியில் குவித்த சம்பவம் பல்வேறு தரப்புக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியது

இந்நிலையில் குறித்த செய்தியினை அறிந்து பாடசாலையை பார்வையிட்ட சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினர் தாமாக முன் வந்து குறித்த பாடசாலையில் பாதணிகள் வாங்க முடியாத வறுமையான சூழலில் வாழும் மாணவா்களின் பெயர் விபரங்களை வலயக் கல்வித்திணைக்களம் ஊடாக பாடசாலை அதிபரிடம் பெற்று அவர்களுக்கு பாதணிகள் மற்றும் புத்தகப் பைகளையும் வழங்கி வைத்துள்ளனர்.

பாடசாலை அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட 117 மாணவா்களுக்கும் பாதணி மற்றும் புத்தகப் பை என்பவற்றோடு, குறித்த சம்பவத்தில் வீதியில் குவிக்கப்பட்ட

பாதணிகளுக்குரிய பதினைந்து மாணவா்களுக்கும் மேலதிகமாக கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபா் கணேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் முறைசார் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளா் த.பேரின்பராசா, பிறேம் நற்பணிமன்றத்தின் ஸ்தாபகா் கெங்கேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பூபாலன், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் தங்கராசா மற்றும் ஆசிரியா்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment