dsdf (6)தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்தார்.

கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்திலேயே இன்று(12) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது, இன்றைய அரசியல் நிலைமைகள், கட்சி அமைப்பாளர்களின் பணிகள் மற்றும் மக்களின் தேவைகள் என்பன உள்ளடங்கலாக பல விடயங்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உட்பட கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.dsdf (1)dsdf (2) dsdf (3) dsdf (4) dsdf (5) dsdf (6) dsdf (7)

Comments

comments, Login your facebook to comment