கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றை இடைமறித்து செய்யப்பட்ட தீடிர் சோதனையில் 2050 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினாலேயே குறித்த கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பரந்தன் பகுதியில் பேருந்து இடைமறி விசேட சோதனை நடவடிக்கையின் மேற்கொள்ளப்பட்ட போதே கஞ்சாபொதியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment