625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல 450 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை e fly travel நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் வழங்கி உள்ளது

13.11.2016 பிற்பகல் ஒரு மணியளவில் கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர் கி .விக்கினராஜா, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபர் கி.விக்கினராஜா,கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிதிகள், மகாதேவா சிறுவர் இல்ல பிரதி நிதிகள் மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள ஆரோபணம் இளைஞர் இல்ல மாணாவர்கள் நாற்பது பேருக்கும் கிளிநொச்சி காந்தி சிறுவர் நிலைய மாணவர்கள் இருபத்தைந்து பேருக்கும் e fly travel நிறுவனத்தின் நிதி அனுசரணையிலையே கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிதிகளால் குறித்த புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

 

Comments

comments, Login your facebook to comment