pris2_2929380a copyகிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் 14 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிராம மட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் தற்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள இப்பகுதி பொது அமைப்புக்கள் தற்போது தமது கிராமத்தில் 17 வயதிற்கும் குறைந்த 14 வரையான சிறுவர்கள் பாடாலைகளுக்கு செல்லாது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளுடன் தொட்புபட்டநிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளன.

எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்து சிறுவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தவேண்டும் எனவும் கிராமமட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை இப்பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய ஒருவன் 25 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டும் மற்றுமொரு சிறுவன் கசிப்பு வைத்திருந்தமை தொடர்பிலும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment