DSC_0016-2வரவு செலவு திட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(15) நிச்சயம் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெறும் என, பஸ் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, சாலை விதிகளை மீறுவோறுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

மேலும் எந்தவொரு காரணத்துக்காகவும் இதனை நிறுத்தப் போவதில்லை என பஸ் ஊழியர்கள் சங்கம் தெவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை முன்னிட்டு கிளிநொச்சி,யாழ்ப்பாணத்திற்கு அதிக அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக  இ.போ.ச முகாமையாளர் தெரிவித்தார்.

Comments

comments, Login your facebook to comment