கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில்பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது கஞ்சா செடியும், 25 லீட்டர் மதுபானமும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல்மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை இன்று(15) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் , இதன் பிண்ணனியில் செயற்படுபவர்கள் யார் என்ற விசாரணை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment