கிளிநொச்சியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியங்குளம் காட்டுப்பகுதியில் இந்த மரக்குன்றிகள் வெட்டப்பட்டுள்ளன.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் பொது இன்று அதிகாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக வெட்டப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகளையும், கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியுடன் சாரதியையும் கைது செய்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளையும், சந்தேகநபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment