kondavil_death_001முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதி கடையொன்றில்   இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக   இளைஞர்கள் இருவர்  வாள்வெட்டுக்கு இலக்காகி  முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்கு, முழங்காவில் பொலிஸார்  கண்காணிப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை. மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments

comments, Login your facebook to comment