முகமாலை A9 வீதியில் இன்று(19) காலை 9.00மணியளவில் பிக்கப் வாகனம் ஒன்று தடம்புரண்டதில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சாரதி உட்பட இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிக்கப் வாகனம் ஒன்று கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு அலுவலகத்துக்கு முன்னாள் வேக கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் மழை காரணமாக வாகனத்தினை தடுப்பினால் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முற்பட்ட வேளை தடம்புரண்டிருக்கலாம் என பளைப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment