கிளிநொச்சி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பொன்னகர், திருமுறிகண்டி, செல்வபுரம் போன்ற கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்கராயனுக்குச் செல்லும் முறிகண்டிவீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான முறிகண்டி, செல்வபுரம், வசந்த நகர் ஆகிய கிராமங்களில் வடிகான்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் குறித்த பணிகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படாமையே வெள்ளநீர் தேங்குவதற்குக் காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment