625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.

மேற்படி பொதுக்கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் , சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அ.நீக்கொலஸ் பிள்ளை, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்க ஒன்றியத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர், ஏனைய மாவட்டங்களின் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தனது உரையில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் போக்குவரத்தோடு தொடர்புடைய சங்கங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் உரிமையாளர்களும், சாரதிகளும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்றும்,

மேலும் போக்குவரத்தோடு தொடர்புபடுகின்ற சங்கங்களில் பல சங்கங்களில் நிதி மோசடிகள் காணப்படுவதாகவும் கொடுக்கப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படாது இழு பறிநிலையில் நிலுவையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைகேடுகளுக்கு அந்தந்த காலப்பகுதியில் இருந்த சங்க உறுப்பினர்களும் புதிதாக பதவி ஏற்பவர்களும் உரிமையாளர்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள்.

எதிர்வரும் வருடம் தை மாதம் போக்குவரத்து தொடர்பு படுக்கின்ற அனைத்து நலன்புரிச்சங்கங்களும், போக்குவரத்து நியத்திச்சட்டத்துக்கு அமைவாக அதிகாரசபையின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும்,

சங்கங்களின் நிதி சார்ந்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டப்படியான கணக்காய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மோசடிகள் காணப்படின் அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றையதினம் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிருவாகக் குழுவானது சங்கத்தின் நோக்கினை அடைந்து கொள்வதற்கும், பொதுமக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதற்கும் தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு,

வடமாகாணத்தில் ஏனைய மாவட்டங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு புதிய நிருவாகத்தின் செயற்பாடுகள் தரமாக அமைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கூறியிருந்தார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

Comments

comments, Login your facebook to comment