20161126_131423கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டியவர்கள் இன்று (26) காலை பிரதேச மக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக பசுக்கள் உட்பட பல மாடுகள் காணாமல் போனவை தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த பகுதியில், மாட்டு எச்சங்கள் கிடப்பது தொடர்பில் அவதானித்த பிரதேச மக்கள், இது தொடர்பில் பொலிஸாரிடமும், கரைச்சி பிரதேச செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும், கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாடுகளை இறைச்சியாக்கி, எச்சங்களை வீlட்டின் அருகில் புதைத்துள்ளனர்.

இதேவேளை வீட்டை சுற்றி தோண்டிய போது மாடுகளின் தலைகள் உள்ளிட்ட பலஎச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும்கு றித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment