தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி தமது உயிர் நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் தேசிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்டசுவரொட்டிகளும் வீதியோரங்களில்காணப்படுகின்றது.

அத்துடன் வட்டக்கச்சி சந்தையில் உள்ள விளம்பரப்பலகை மற்றும் தார் வீதிகளிலும் நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் மாவீரர்நாள் தொடர்பான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

 

Comments

comments, Login your facebook to comment