b9f640524b8829f0c3a4309c6765167c_1476181907-bகிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் பகுதிக்கு கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞன், ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1 கிலோகிராம் கஞ்சா, கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை, ஏ-9 நெடுஞ்சாலையில் வைத்து மறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான 1கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியினை சேர்ந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment