தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வணக்க நிகழ்வையொட்டி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஆனால் யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்க் குடியமர்ந்த பின்னர் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தமிழ் மக்கள் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த மாவீரர்களது பெற்றோர் கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களுக்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

Comments

comments, Login your facebook to comment