625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடந்த விமான நிலையத்திற்குள் இருந்து விமான நிலைய ஊழியர்களும், பயணிகளும் பதட்டத்துடன் வெளியேறி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசார் இந்த சம்பவம் பற்றி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் ஒரு பகுதிகள் மூடப்பட்டு பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) 625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment