625.368.560.350.160.300.053.800.560.160.90 (7)கனடா நாட்டில் தாய் மற்றும் மகளை கொடூரமாக கொலை செய்த நபரை 5 ஆண்டுகளுக்கு பிறகு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ நகரில் லிண்டா டேனியல் என்ற 47 வயதான பெண் தன்னுடைய 13 வயதான மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த யூலை 2011ம் ஆண்டு தாயும் மகளும் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் பதிவு செய்ததும் இருவரையும் தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டனர்.

மேலும், கடந்தாண்டு டிசம்பவர் மாதம் வரை தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உறவினர்கள் பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதன் பிறகு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் இந்த விவகாரத்தில் லிண்டா டேனியலின் நண்பரான Glenn Bauman(43) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எனினும், அந்த நபர் குறித்து தகவல் இல்லாததால் அவரை கைது செய்ய கனடா நாடு முழுவதும் உள்ள பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அல்பேர்ட்டா மாகாணத்தில் கடந்த 19ம் திகதி நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மேலும், தாய் மற்றும் மகளை கடத்தி அவர் கொலை செய்துள்ளதும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து இறுதி தீர்ப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Comments

comments, Login your facebook to comment