625.368.560.350.160.300.053.800.560.160.90அமெரிக்காவின் நியூஜெர்சியில் தண்டவாளத்தில் சிக்கிய நபரை விரைந்து வரும் ரெயிலில் நின்று பொலிசார் ஒருவர் ஹீரோவாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஜெர்சி மாகாணத்தில் Secaucus சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் தண்டவாளத்தில் சிக்குண்டு இருப்பதாக பொலிசார் ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவலர் Ortiz குறிப்பிட்ட நபரை அந்த தண்டவாளத்தில் இருந்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து எழுந்து வெளியேற மறுத்து அடம் பிடித்துள்ளார்.

தற்கொலைக்கு அந்த நபர் முயல்வதை புரிந்து கொண்ட காவலர் Ortiz அவரை வலுக்கட்டாயமாக இழுக்க முயற்சி மேற்கொண்டார். அதே வேளையில் அந்த ரெயில் தண்டவாளத்தில் விரை ரெயில் ஒன்று தூரத்தில் வருவதை காவலர் தெரிந்து கொண்டார்.

ரெயில் நெருங்கி வந்துகொண்டிருக்கையில் குறிப்பிட்ட நபரை அலாக்காக தூக்கி தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

அடுத்த 2 விநாடிகளில் ரெயில் கடந்து செல்லவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. குறிப்பிட்ட நபரை காப்பாற்றிய அந்த காவலரை பொதுமக்களும் அவரது சக பொலிசாரும் வெகுவாக பாராட்டினர்.

தமது உயிரையும் பொருட்படுத்தாமல் இன்னொருவரை காப்பாற்ற துணிந்த அவரது செயல் பாராட்டுக்குரியது என நியூ ஜெர்சி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment