625.0.560.320.500.400.194.800.668.160.90இறக்காமல் வாழ்வதற்கு யார்தான் விரும்பமாட்டார்கள்? ஆனால் மனிதர்களாகிய ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறக்கத்தான்போகின்றார்கள்.

விபத்து, தற்கொலை, கொலை என மனிதர்கள் இறப்பது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் எவ்வித சிகிச்சைகளும் அற்ற நோய்களுக்கு இலக்காகிமரணிப்பது சற்றே வேதனையான விடயம் தான்.

ஆம் அப்படி ஓர் நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா?

அதாவது அந்த நோய்க்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்தபின் இறந்த உடலை மீண்டும் உயிர்பிக்க முடியுமா?

நான் மேற்கூறியது போல், எவ்வித சிகிச்சைகளும் அற்ற நோய்களுக்கு இலக்காகி மரணிப்பவர்களை உறையவைத்து மருத்துவ வளர்ச்சியின் பின், அந்நோய்க்கான தீர்வு கிடைக்கப்பெறும் போது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டால் மரணித்தவர்களை மீண்டும் உயிர்பிக்க முடியுமாம்.

இதற்கான சோதனைகளும் தற்போதுள்ள ஆராய்ச்சியாளர்களினால் அமெரிக்காவில் மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனை “Cryonics”என்று அழைப்பர்.

மேலும் இறந்த மனிதர்களையும், மிருகங்களையும் கொண்டு இந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் “nitrogen”இன் உதவியுடன் -196 டிகிரியில் இவ்வாறு பதபடுத்துகின்றனர்.

இருந்தும் இதில் பலதரபட்ட முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு இச்செயற்பாட்டின் போது பிரணவ வாயு முற்றாக தடைபடுகின்றது.

மேலும் உடலில் உள்ள எலும்புகள் முறிவுகளுக்கு உள்ளாகின்றன. இதற்கான தீர்வு தற்போது கிடைக்கபெறாவிட்டாலும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கபடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்று வரை 270ற்கு மேற்பட்ட இறந்த மனித உடல்களை இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

ஆச்சரியப்படவேண்டிய விடயம் தான் நீங்களும் இவ் ஆராச்சியில் பங்குகொள்ள ஆர்வப்படுகின்றீர்களா?

625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment