625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)மெக்சிகோவில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு நடந்த 2வது மாதம் அவர் திரும்பி வந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மெக்சிகோவில் 74 வயதான கோமர் லூனா என்பவரை முதுமை காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் இல்லத்தில் அவரது குடும்பத்தினர் சேர்த்திருந்தனர்.

குறிப்பிட்ட முதியவர் அந்த இல்லத்தில் இருந்து தப்பி தெருவில் பிச்சை எடுத்தும் மதுவுக்கு அடிமையாகியும் வாழ்ந்து வந்துள்ளார். குடும்பத்தினர் பல முறை கட்டாயப்படுத்தியும் அந்த முதியவர் முதியோர் இல்லம் செல்ல மறுத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பொலிசார் சிலர் வந்து குறிப்பிட்ட முதியவர் சாலை ஓரத்தில் இறந்து கிடப்பதாகவும், வந்து உடலை கைப்பற்ற வேண்டும் எனவும் குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட முதியவரின் உடலை கைப்பற்றிய குடும்பத்தினர் உரிய முறைப்படி அவரை எரியூட்டினர்.

இந்த நிலையில் சுமார் 2 மாதங்கள் கடந்த பின்னர் முதியவர் லூனா பரபரப்பான சாலையில் வந்து மதுவுக்காக சண்டையிட்டு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தருவதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார், நேராக அவரது வீட்டிற்கு கூட்டி வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏற்கனவே முதியவர் லூனா இறந்ததாக கருதி எரியூட்டிய நிலையில் உயிருடன் அவர் திரும்பி வந்தது குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக பொலிசார் கட்டாயப்படுத்தி ஒருவரது உடலை இவர்களது தந்தை எனக் கூறி ஒப்படைத்ததை நினைவு கூர்ந்த லூனாவின் மகள், பொலிசாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் எரியூட்டப்பட்ட நபரின் குடும்பத்தினரை கண்டுபிடித்து அவரின் இறுதிச்சடங்கு சாம்பலை ஒப்படைக்க வேண்டும் எனவும் லூனாவின் மகள் தெரிவித்துள்ளார்.

625.368.560.350.160.300.053.800.560.160.90 (3)

Comments

comments, Login your facebook to comment