625.368.560.350.160.300.053.800.560.160.90 (4)பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான தாக்குதலில் இதுவரை 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல் ஒன்றின் போது பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 வயதான சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ஆரம்பித்துள்ள அந்நாட்டு பொலிஸாரைத் தவிர, இந்த நடவடிக்கையில் மற்றொரு குழுவும் தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் துப்பாக்கிகள் தாங்கியவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிதாரிகளே இந்த சிறுமியைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியின் தாத்தாவிற்கு வைத்த இலக்கு தவறி சிறுமி பலியாகியிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments

comments, Login your facebook to comment