625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் கடந்த 52 ஆண்டுகளாக தினமும் ஒரேநிறத்தில் உடையணிந்து வருகின்றனர்.

பிரான் மற்றும் எட் கார்கீலா இருவரும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் வார இறுதி கொண்டாட்டங்களில் இணைந்து நடனமாடி குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் மகிழ்வித்து வந்துள்ளனர்.

இதன் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து நடனமாடியதும், அதையே அவர்கள் கோவில் உள்ளிட்ட வெளியிடங்களுக்கும் அணிந்து சென்றுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் சீக்கிரத்தில் இவர்களை அடையாளம் கண்டு நலம் விசாரிக்கவும் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பிரான் மற்றும் எட் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தும் இந்த தகவலை அவர்களது பேரன் தனது டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment