625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)துபாய் விமானத்தில் விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த 22ம் திகதி தன்சானியா நாட்டின் Dar es Salaam நகரில் இருந்து விமானம் ஒன்று துபாய்க்கு புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் துபாயில் இறங்கிய உடனே பொலிசார் நபர் ஒருவரை அதிரடியாக கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணிப் பெண் ஒருவருரை அந்த நபர் பாலியல் சில்மிஷம் செய்ததால் கைது செய்துள்ளோம்.

அந்த நபர் முதலில் பணிப்பெண்ணிடம் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளார்.

அவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள நபரின் அருகில் சென்ற போது அவரை கட்டியணைந்து முத்தமிட முயன்றுள்ளார்.

அந்த பணிப்பெண்ணின் புகாரின் பெயரிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment