625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேண்டுமென திருடி ஜெயிலுக்கு சென்றுள்ள வினோத கணவர் ஒருவரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் சிட்டியில் லாரன்ஸ் ஜான் ரிப்பிள் எனும் 70 வயது தாத்தா அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியுடன் சண்டையிட்ட லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதன் பின்னர் உன்னோடு வாழ்வதற்கு நான் சிறையில் நிம்மதியாக இருப்பேன் என்று அவர் தனது மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதன் பின்னர் அவர் அருகில் உள்ள வங்கிக்கு சென்று ஒரு பேப்பரில், தன்னிடம் துப்பாக்கி உள்ளதாகவும், தனக்கு பணம் தேவை என்று எழுதி வங்கி அலுவலரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் பார்த்து பயந்து போன வங்கி அலுவலரும் அவருக்கு 3000 டொலர் பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த பணத்தை வாங்கிக்கொண்ட லாரன்ஸ் தப்பிச் செல்லாமல் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் பணத்தை கொடுத்து, தான் திருட வந்ததாகவும், உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அவரின் வினோத நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பின்னர், விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியுடன் சண்டை போட்டதாகவும், அதனால் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் சிறைக்கு வர விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் லாரன்ஸ் இப்படி வெறுத்துப் போய் வீட்டிற்கு ஜெயிலே பரவாயில்லை என்ற முடிவுக்கு வர என்ன காரணம் என்று தான் தெரியவில்லை.

625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment