நீண்ட நாட்களாக போதை மருத்து பழக்கத்தில் உள்ளவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி இல்லை என்று அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனேடியரான மாத்யூ ஹார்வீ தமது 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் டிஸ்னிலாண்ட் செல்ல, அமெரிக்க கனடா எல்லை வழியாக முயன்றுள்ளார்.

அப்போது அவரை விசாரித்த எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், விசாரணையின் முடிவில் இவர் கூறிய தகவலை அடுத்து இவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

மரிஜுவானா பயன்படுத்த சட்டப்பூர்வமான ஆவணத்தை பெறும் முன்னரே அதை பயன்படுத்தியது தவறு என வாதிட்ட அந்த அதிகாரிகள்,

போதை மருந்து பயன்படுத்துவர்கள் முன்னனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதி பெறாமல் எல்லை வழியாக வாகனத்தில் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.

கனடாவில் குறிப்பிட்ட நபர் சட்டப்பூர்வமாக மரிஜுவானா பயன்படுத்த அனுமதி பெற்றிருந்த போதும் அவரை அமரிக்காவில் நுழைய மறுப்பு தெரிவித்துள்ளது கண்டனத்துக்கு உரியது என பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளது.

கனடா அமெரிக்க எல்லையில் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இறுதியில் அவரை முன் அனுமதி பெறவேண்டும் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

உண்மையை மறைத்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் அனுமதித்திருப்பார்கள், ஆனால் போதை மருந்து பயன்படுத்துவது பொழுதுபோக்குரீதியாக மட்டுமே என்பதால் உண்மையை கூறியதாக மாத்யூ ஹார்வீ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் ரால்ப், அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் போதை மருத்துக்கு கட்டுபாடு இல்லை என கூறிய ரால்ப், அதுபோலவே அங்குள்ள 3 முதல் 4 மாகாணங்களில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment